உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோட்டில் காப்பர் ஒயர் திருடிய 8 பேர் கும்பல் கைது

திருச்செங்கோட்டில் காப்பர் ஒயர் திருடிய 8 பேர் கும்பல் கைது

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு எதிரில் கடந்த, 12ம் தேதி இரவு பொலிரோ வாகனத்தில் வந்த சிலர், சாலையில் குழி தோண்டி கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். திருச்செங்கோடு டவுன் போலீசில் தினேஷ்குமார் புகார் செய்தார்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தர்மபுரி மாவட்டம், அரூர் சந்தம்பட்டி மணிகண்டன், 29, அருண், 21, ரஞ்சித், 23, பாப்பிரெட்டிப்பட்டி, ராமியனஹள்ளி தெய்வம், 32, மதுரை வீரன், 29, சின்னதுரை, 27, மணிகண்டன், 19, சுரேஷ், 24, என தெரியவந்தது.இவர்கள், 8 பேரும் ராசிபுரம் அத்தனுார் பகுதியில் வீடு எடுத்து தங்கி, ஏர்டெல் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து கொண்டு இருப்பதும், பி.எஸ்.என்.எல்., நிறுவன ஒயர்களை திருடி செல்ல, பொலிரோ வாகனத்தில் வந்து குழி பறித்து கொண்டு இருப்பதும் தெரியவந்தது.மேலும் நடத்திய விசாரணையில், 1.27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடி அத்தனுார் பகுதியில் உள்ள, பழைய இரும்பு வியாபாரியிடம் விற்பனை செய்து பணம் பிரித்து வைத்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, 8 பேரையும் திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் கைது செய்தனர். பின், காப்பர் ஒயரை மீட்டதுடன் திருட்டுக்கு பயன்படுத்திய பொலிரோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை