உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காப்புகாடு வனப்பகுதியில் குப்பை அகற்றும் பணி

காப்புகாடு வனப்பகுதியில் குப்பை அகற்றும் பணி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில், குடைவறை கோவிலாக ஆர்.புதுப்பட்டி காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. கோவிலை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளே சென்று சாப்பிடுவது, குரங்குகளுக்கு உணவு தருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், இங்குள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக், கேரி பேக்குகள், குப்பைகள் ஆகியவை அதிகம் உள்ளன. இதையடுத்து ராசிபுரம் வனச்சரக அலுவலகம் சார்பில், நேற்று காப்புக்காடு வனப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.ரேஞ்சர் செந்தில்குமார், வனவர்கள் ஆனந்த், ஸ்ரீகாந்த், வனகாப்பாளர் முரளி மற்றும் தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இப்பணி அனைத்து காப்புக்காடு வனப்பகுதியிலும் தொடர்ந்து நடைபெறும் என செந்தில்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ