உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காஸ் டேங்கர் ஸ்டிரைக் அதிகாரிகள் பேச்சு தோல்வி

காஸ் டேங்கர் ஸ்டிரைக் அதிகாரிகள் பேச்சு தோல்வி

நாமக்கல்: லாரிகளுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள், ௯ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், எல்.பி.ஜி., சங்க தலைவர் சுந்தரராஜூக்கு எதிராக, டேங்கர் லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தென் மாநிலம் முழுதும், இன்று முதல், 1,000 டேங்கர் லாரிகளை இயக்க முடிவு செய்தனர். இதற்கிடையே, ஆயில் நிறுவன அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம், தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சு நடத்தினர். மூன்று ஆயில் நிறுவன உயரதிகாரிகள் பங்கேற்ற நிலையில், பேச்சு தோல்வியில் முடிந்தது. சங்க தலைவர் சுந்தரராஜன் கூறுகையில், ''எங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. இன்றும் பேச்சு நடக்கிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ