மேலும் செய்திகள்
தேவந்தவாக்கம் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
12-Aug-2025
வந்தவாசி :திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஜாலியாக இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும், தலைமறைவாகி வேறு பெண்ணை மணந்தவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுார் அடுத்த காயலுாரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 30. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா, 26. இருவரும், 2015 முதல், 2020ம் ஆண்டு வரை சென்னையில் தனியார் துணிக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தனர்.இந்நிலையில், 2021 கொரோனா காலகட்டத்தில் ஜவுளி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், அவரவர் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், திருநாவுக்கரசுடன் ஜாலியாக இருந்ததில், சுகுணாவிற்கு 2021ல் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறிய திருநாவுக்கரசு, சொந்த ஊர் சென்றுவிட்டு வருவதாக கூறியவர் தலைமறைவானார். இதனால், சுகுணா, சென்னை தி.நகர் போலீசில் புகார் அளித்தபோது, போலீசார் மனுவை பெற மறுத்தனர்.இதனால் கடந்த ஜூலை, 17ம் தேதி வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் சுகுணா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசின் சொந்த ஊருக்கு சென்று பார்த்தபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து கண்காணித்ததில், அவர் வேம்பு என்ற பெண்ணை, திருமணம் செய்து கொண்டு, அவருக்கு தற்போது, 2 வயதில் பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, வந்தவாசி அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
12-Aug-2025