உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோ--கோ விளையாட்டு போட்டி ராயல் இன்டர்நேஷனல் சாம்பியன்

கோ--கோ விளையாட்டு போட்டி ராயல் இன்டர்நேஷனல் சாம்பியன்

குமாரபாளையம், குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், இரண்டாவது ஆண்டாக ஈரோடு சஹோதயா கூட்டமைப்பு சார்பில், மாணவ, மாணவியருக்கு இடையே கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது. ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 30 சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தாளாளர் அன்பழகன் தலைமை வகித்து பேசுகையில், ''விளையாட்டு, மனதிற்கும் உடலுக்கும் மன வலிமையை தரும். விளையாடுவதன் மூலம் மன அழுத்தமானது குறைந்து கல்வியில் மேன்மை அடையலாம்,'' என்றார்.தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கென நடத்தப்பட்ட, 12, 14, 16, 19 வயதிற்குட்பட்ட அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்ற ராயல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர் பங்கேற்று, சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை