உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தினர், நேற்று, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். அதில், அனைத்து மாநிலங்களிலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கை-2020ஐ திரும்பப் பெற வேண்டும். 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ