உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன், மதிய உணவு நேர இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் வட்டக்கிளை தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். வட்டக்கிளை பொருளாளர் வினோத்குமார் நன்றி கூறினார். முன்னதாக, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ