விமான படை பயிற்சிக்காக அரசு பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் பயணம்
கரூர், புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், விமான படை பயிற்சிக்காக, தஞ்சாவூர் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தனியார் பல்கலைகழக வளாகத்தில், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியருக்கு விமான படை பிரிவு சார்பில், 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதில், பங்கேற்க கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, தேசிய மாணவர் படை மாணவர்கள், 50 பேர், ஆசிரியர் பொன்னுசாமி தலைமையில், நேற்று தஞ்சாவூருக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.அவர்களை பள்ளி தலைமையாசிரியர் விஜயன், ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், குப்புசாமி, சரவணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.