உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தாத்தா பலி; பேரனுக்கு சிகிச்சை

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தாத்தா பலி; பேரனுக்கு சிகிச்சை

திருச்செங்கோடு, திருச்செங்கோடு அருகே, சாலையோரம் டூவீலரில் அமர்ந்தபடி காய்கறி வாங்கிக்கொண்டிருந்த தாத்தா, பேரன் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் தாத்தா பலியானார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த கோழிக்கால்நத்தம், ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம், 65; கட்டட மேஸ்திரி. இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, தன் பேரன் ஜஸ்டின் கிருபாகரன், 12, என்பவரை, 'ராயல் என்பீல்டு' டூவீலரில் அமர வைத்துக்கொண்டு காய்கறி வாங்க சென்றார். செம்பாம்பாளையம் அருகே, சாலையோரம் டூவீலரை நிறுத்தி அதில் அமர்ந்தபடி, அங்கிருந்த கடையில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது, மல்லசமுத்திரத்திலிருந்து, திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த, 'ஆம்னி' கார், டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட கட்டட மேஸ்திரி சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரன் படுகாயமடைந்தார். மேலும், 'ஆம்னி' வேன் டிரைவர் சண்முகம், 60, அதில் வந்த அங்குராஜ், 65, நாகலட்சுமி, 55, ஆகியோரும் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், அவர்கள் அனைவரையும் மீட்டு, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ