உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / க்ரில் ஒர்க் சங்கபொதுக்குழு கூட்டம்

க்ரில் ஒர்க் சங்கபொதுக்குழு கூட்டம்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு க்ரில் ஒர்க் சங்க பொதுக்குழு கூட்டம், ராமசாமி அம்மணியம்மாள் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. சங்க தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக அரசு, தினமும் மாற்றமாகும் இரும்பு விலையை கட்டுப்படுத்த வேண்டும். இரும்பு விலையை ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டம், நல வாரியம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !