மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
28-Sep-2025
ப.வேலுார் பரமத்தி அருகே, தொட்டிபட்டி சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை, ராம நவமி அன்று ஜெயந்தி விழா, குரு பூர்ணிமா, ஆவணி, சித்திரை நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை தின விழா, தமிழ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடக்கும். அதில், பரமத்தி, ப.வேலுார், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். மேலும், ஆண்டுதோறும் விஜயதசமி அன்று குருபூஜை சிறப்பு வழிபாடு நடக்கும். அதன்படி, நடப்பாண்டு, 107ம் ஆண்டு சாய் குருபூஜை விழா, வரும், 2ல் கொண்டாடப்படுகிறது. அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 9:15 மணி வரை கூட்டு பிரார்த்தனை, ஆரத்தி தரிசனமும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. அதேபோல், காலை, 9:30 முதல், 10:30 மணி வரை ஸ்ரீவித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.
28-Sep-2025