கொங்கண சித்தர் குகையில் குருபூஜை
மல்லசமுத்திரம்: வையப்பமலை, கொங்கண சித்தர் குகையில் நேற்று குருபூஜை நடந்தது.மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில் வாரம்தோறும் வியாழக்கிழமை குருபூஜை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று பகல் 1:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.