மேலும் செய்திகள்
திடீர் மழையால் வியாபாரம் பாதிப்பு
11-Oct-2024
ஒரு மணி நேரம் கனமழை; ஸ்தம்பித்தது நகரம்
10-Oct-2024
ராசிபுரம் பகுதியில் கொட்டிய கனமழைஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மழைநீர்ராசிபுரம், நவ. 1-ராசிபுரம் பகுதியில் நேற்று ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் பஸ் ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.தீபாவளியான நேற்று காலை முதல் ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 3:00 மணியளவில் தூறலுடன் துவங்கிய மழை, கனமழையாக மாறியது. ராசிபுரம், கவுண்டம்பாளையம், முத்துக்காப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மாணிநேரம் காற்றுடன் கன மழை பெய்தது.கன மழையால் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் ரோடு, பட்டணம் ரோடு, ஆத்தூர் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம்போல் ஓடியது. சாலையில் வந்த மழைநீர் பள்ளமாக இருக்கும் புதிய பஸ் பஸ் ஸ்டாண்டில் புகுந்தது. ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதது. பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.ராசிபுரம் பழைய பஸ்நிலையம் பகுதிக்கு வந்த மழைநீர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்தது. பிரசவ வார்டு, பெண்கள், குழந்தைகள் வார்டு பகுதிகளில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், அங்கிருந்த உள் நோயாளிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.திடீர் மழையால் ராசிபுரம் சுற்று வட்டாரத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது.* குமாரபாளையத்தில், தீபாவளி நாளான நேற்று காலை பட்டாசு, இனிப்பு, இறைச்சி, துணி, நகை, மளிகை, ஓட்டல்கள், பேக்கரி, சாலையோர கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை, 11:30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். இந்த மழை மதியம், 1:00 மணி வரை நீடித்தது.
11-Oct-2024
10-Oct-2024