மேலும் செய்திகள்
கொல்லம்பாளையத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
20-Sep-2025
ராசிபுரம், ராசிபுரத்தில், நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது. அப்போது, சிவானந்தா சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் அதிகம் இருந்தது. வானமும் மேக மூட்டமின்றி காணப்பட்டது. இதனால், கட்டட வேலை, வேளாண் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 3:30 மணியளவில் திடீரென ராசிபுரம் பகுதியில் பலத்த இடி, மின்னல் காற்றுடன் கன மழையும் பெய்தது.ராசிபுரம் மட்டுமின்றி நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் ஒன்றியங்களிலும் துாறல் மழை பெய்தது. கட்டட பணியாளர்கள் திடீர் மழையால் பெரிதும் அவதிப்பட்டனர். அதேபோல், கடலை அறுவடை, சோளத்தட்டு உள்ளிட்ட பணிகளில் இருந்த தொழிலாளர்கள் திடீர் மழையால் அவைகளை பாதுகாக்க முடியாமல் திணறினர். மாலை நேரத்தில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராசிபுரம், சிவானந்தாசாலை தனியார் பள்ளி அருகே பெரிய இடி சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்த தென்னை மரத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் பதற்றத்துடன் கற்ற தொடங்கினர். ஆனால், கனமழையால் தென்னை மரத்தில்பிடித்த தீ அணைந்தது.
20-Sep-2025