மேலும் செய்திகள்
நாள் முழுவதும் பெய்த சாரல் மழையால் பாதிப்பு
15-Oct-2024
ராசிபுரம், நவ. 2-ராசிபுரம் பகுதியில், கடந்த, இரண்டு நாட்களாக வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம், ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும், ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டியில், 30 மி.மீட்டர் மழையும், ராசிபுரம் அணைப்பாளையத்தில், 33 மி.மீட்டர் மழையும் பாதிவாகியிருந்தது.ஒரு மணிநேரம் பெய்த மழையால், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், மழைநீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். சில மணி நேரத்தில் தண்ணீர் வறண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேபோல், நேற்று மதியம், 3:00 மணிக்கு ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 45 நிமிடம் காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று அமாவாசை மற்றும் மாரியம்மன் பண்டிகை என்பதால், நாமக்கல் பிரதான சாலையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.ஆனால், மழை பெய்த பின், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கட்டனாச்சம்பட்டி செல்லும் சாலையில், ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.* வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, நேற்று காலை முதலே, வெண்ணந்துார், அத்தனுார், ஓ.சவுதாபுரம், தேங்கல்பாளையம், ஆர்.புதுப்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலும், நேற்று காலை முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மாலையில், அரை மணி நேரம் கனமழை கொட்டியது.வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக சென்றனர். கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சேதமான சாலைகளில், சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.மாவட்டத்தில் 132.30 மி.மீ., தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் கனமழை பெய்தது.அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில், மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளி அன்று இரவு மழை பெய்ததால், மக்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல் நேற்று காலை, 6:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:குமாரபாளையம், 9.20, மங்களபுரம், 6.60, நாமக்கல், 8, ப.வேலுார், 10.50, ராசிபுரம், 72, திருச்செங்கோடு, 1, கலெக்டர் அலுவலகம், 8, கொல்லிமலை, 17 என, மொத்தம், 132.30 மி.மீ., மழை பதிவானது.
15-Oct-2024