| ADDED : நவ 20, 2025 01:55 AM
திருச்செங்கோடு, நதிருச்செங்கோடு நகராட்சியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணியை விரைந்து முடிக்க உதவி மையம், நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், இந்த உதவி மையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாறு, நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: பொதுமக்கள், ஜனநாயக கடமையாற்ற வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது அவசியம். தங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட படிவங்களை நிரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், 2002ல் வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்கள் கேட்கப்படுவதால், அதை தேடுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். இதற்கான, திருச்செங்கோடு நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து, பாகம் எண், வரிசை என் கண்டுபிடித்து தர கம்ப்யூட்டர் வசதியுடன் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உதவி மையத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.