உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதன்சந்தை சர்வீஸ் சாலையில் எரியாத உயர்கோபுர மின்விளக்கு

புதன்சந்தை சர்வீஸ் சாலையில் எரியாத உயர்கோபுர மின்விளக்கு

சேந்தமங்கலம்: புதன்சந்தை மேம்பால பகுதியில் எரியாத உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சா-லையில், புதன்சந்தை மேம்பாலத்திற்கு முன்புள்ள பஸ் ஸ்டாப்பில், நாமக்கல்லில் இருந்து சென்னை செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்கள், பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.மாலை, 6:00 முதல், இரவு, 12:00 மணி வரையிலும் பயணிகள் இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, அப்பகு-தியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது உயர்கோபுர மின் விளக்கு, கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்களும், பஸ் பயணிகளும் இரவு நேரத்தில் மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாப்-புக்கு வெளியூர் செல்லும் மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் உடனடியாக மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என, அப்பகு-தியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ