உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான் பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய நாட்டுக்கோழி வாரச்சந்தையில் பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ப.வேலுார் பகுதி முழுவதும் விவசாய தொழிலாளர் நிறைந்த பகுதியாகும். ஞாயிறு விடுமுறை என்பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்பனையாகும். குறிப்பாக, அனைத்து கோழிக்கறி கடைகளிலும் கூட்டம் அதிகளவு இருக்கும். இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும்.தைப்பூச திருவிழா விரதம் முடிந்ததையொட்டி பொதுமக்கள் நாட்டுக்கோழி வாங்க ஆர்வமாக வந்ததால், நாட்டுக்கோழி விலை உயர்ந்தது. கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது. தற்போது, கிலோவுக்கு, 150 ரூபாய் கூடுதலாகி, 550 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை