அரசு பள்ளியில் ஹெச்.எம்., உயிரிழப்பு
சேந்தமங்கலம், டிச. 24-ராசிபுரம் அருகே, காக்காவேரியை சேர்ந்தவர் முத்துக்குமார், 58. இவர், கொல்லிமலை அரியூர்நாடு பனங்காட்டுப்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இவர், நேற்று பள்ளியில் பணியில் இருந்த போது, திடீர் என உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அப்போது, உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், செம்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.