உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.4 கோடியில் பழங்குடியின மக்களுக்கு வீடு

ரூ.4 கோடியில் பழங்குடியின மக்களுக்கு வீடு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், தாட்கோ மூலம் மலைவாழ் மக்களுக்கு, நான்கு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளை, கலெக்டர் உமா நேற்று ஆய்வு செய்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2023-24 மானிய கோரிக்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற, 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டி-யலில் சேர்க்கப்பட்டுள்ள, 500 நரிக்குறவர் குடும்பங்கள் என, மொத்தம், 1,500 குடும்பங்களுக்கு, 45 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் வீடுகள் கட்டித்தரப்படும் என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம் கொல்லிமலையில், 30 வீடுகளும், தரைப்பகுதியில், 49 வீடுகளும் என மொத்தம், 79 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. குண்டுனிநாடு ஊராட்சியில், 14 வீடுகள், திண்ணுார் நாட்டில், ஒரு வீடு, குண்டூர் நாட்டில், எட்டு வீடு, பெரியப்பட்டியில், 17 வீடு, எடப்புளி நாட்டில், ஏழு வீடுகள், வள்ளிபுரத்தில், 11 வீடுகள், உரம்பு பகுதியில், 15 வீடுகள், ஆயில்பட்டி, இருளப்-பட்டி, உரம்பு, மாவூர், ஊனந்தாங்கல் மற்றும் வாழவந்தி-கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் தலா, ஒரு வீடு என மொத்தம், 79 வீடுகள் தலா, 5.07 லட்சம் ரூபாய் வீதம், நான்கு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகளை, கலெக்டர் உமா, நேற்று ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவ-லர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் வீடுகள் கட்டப்பட்டு வருவது குறித்து கலந்துரையாடினார்.ராஜபாளையத்தில், ஆதிதிராவிடர் நல அரசு மாணவர் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்கள் பயிலும் வகுப்புகள், விடுதியில் படுக்கை அறை வசதி, குடிநீர் வசதி, வழங்கப்படும் உணவு பட்டியல், உணவு பொருட்களின் இருப்பு, கழிப்பறை வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, விடுதி பணியாளரிடம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்க தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி