உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன், பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன், பணம் கொள்ளை

குமாரபாளையம்: குமாரபாளையம், கிழக்கு காவேரி நகரை சேர்ந்தவர் சுசீலா, 65; மகளிர் குழு நிர்வாகி. இவர் கடந்த, 12ல் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள மற்றொரு வீட்டில் துாங்கினார். காலை எழுந்து வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அதிர்ச்சிய-டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்தி-ருந்த, 10 பவுன் நகை, 5,000 ரூபாய் ஆகியவற்றை காண-வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ