உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மீது ஆம்னி கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

லாரி மீது ஆம்னி கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 35; இவர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மனைவியுடன், 'ஆம்னி' காரில் காவிரி சாலையில் சென்றுகொண்டிருந்தனர். கண்ணனுார் மாரியம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தண்ணீர் லாரி மீது அதிவேகமாக வந்த, 'ஆம்னி' கார் மோதியது. இதில், காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, காருக்குள் சிக்கிய கணவன், மனைவியை போராடி மீட்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை