உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டிற்கு வர மறுத்த மனைவி கத்தியால் குத்தி கணவர் வெறி

வீட்டிற்கு வர மறுத்த மனைவி கத்தியால் குத்தி கணவர் வெறி

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, வீட்டிற்கு வர மறுத்த மனைவியை, ஆத்திரம-டைந்த கணவர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜ்குமார், 26; பெயின்டர். இவருக்கும், முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த செல்ல-முத்து மகள் மீனா, 25, என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்-தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ராஜ்குமார், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்-வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் வாழ பிடிக்-காத மீனா, கோவித்துக்கொண்டு முத்துக்காளிப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து தனியார் கார்மென்ட்சுக்கு வேலைக்கு சென்று வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை, மாமியார் வீட்டிற்கு சென்ற ராஜ்-குமார், மனைவி மீனாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மீனா வர மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார், மறைத்து வைத்திருந்த கத்-தியால் மீனாவின் தலை, உடல் பகுதியில் சரமாரியாக குத்தினார். மீனாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கையில் காயமடைந்த ராஜ்குமார், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ