உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெறிநாய் அட்டகாசம் அதிகரிப்பு சமயசங்கிலி விவசாயிகள் அச்சம்

வெறிநாய் அட்டகாசம் அதிகரிப்பு சமயசங்கிலி விவசாயிகள் அச்சம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியன், சமயசங்கிலி பஞ்., பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும், ஏராளமான விவசாயிகள் ஆடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சமயசங்கிலி பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாக வெறிநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்., 6ல், சமயசங்கிலி பகுதியில் மேய்ச்சலில் இருந்த, 10 ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதறின. இதில், 10 ஆடுகளும் இறந்தன. இதனால், வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமயசங்கிலி பஞ்., நிர்வாகத்திடம் விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சமயசங்கிலி அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் வெறிநாய் கடித்து, 34 நாட்டுக்கோழிகள் இறந்தன. தொடர்ந்து வெறிநாய்களின் அட்டகாம் அதிகரித்து வருவதால், இனியும் அலட்சியம் செய்யாமல், வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ