உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காய்கறி பயிருக்கு பாசனம் வழியாக இடுபொருட்கள்

காய்கறி பயிருக்கு பாசனம் வழியாக இடுபொருட்கள்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காய்கறி பயிர்களுக்கு தனியாக இடுபொருட்கள் தருவதைவிட, பாசன வழியாகவும் எளிதாக தரமுடியும். ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், இ.எம்., புண்ணாக்கு கரைசல், எருக்கு கரைசல், தொல்லுயிர் கரைசல், நொதித்த மாட்டு சிறுநீர், மீன் அமிலம் ஆகியவற்றை பாசன நீரில் கலந்து தரலாம்.வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யம், இ.எம்., அரப்பு மோர்க்க-ரைசல், தோமோர் கரைசல், மீன் அமிலம், முட்டை, எலுமிச்சை கரைசல், தேங்காய் மற்றும் கடலை புண்ணாக்கு கரைசல், மூலிகை தயிர் கரைசல் ஆகியவற்றை காய்கறிகளுக்கு ஊக்கிக-ளாக தெளிக்கலாம்.மேலும், பூச்சி விரட்டி, பயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஐந்-திலை கரைசல், வேப்பங்கொட்டை, பூண்டு கரைசல், வசம்பு கரைசல், நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம், கற்பூர கரைசல், பிரம்-மாஸ்திரம் ஆகியவற்றை இயற்கையாக பயன்படுத்தலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை