ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி தீவிரம்
பள்ளிப்பாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்க பகுதியில் முழுமையாக தண்ணீர் தேக்கியுள்ளதால், மின் உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது.பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி, கடந்த, 2011 முதல் மின் உற்பத்தி செய்யப்படுகி-றது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போதும், பாச-னத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும், மின் உற்பத்தி நடக்கும். மற்ற சமயத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில், மின் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் நடக்கும். கோடைகாலத்தில் குடிநீ-ருக்கு மட்டும், மூன்று மாதங்களுக்கு தண்ணீர் தேக்கி வைப்-பதால், அந்த சமயத்தில் மின் உற்பத்தி இருக்காது. இரண்டு மாதங்களாக காவிரி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் வருவதால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகி-றது. ஆற்றில் தண்ணர் அதிகளவு வருவதால், தடுப்பணையில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது.