குண்டுமல்லி விலை கிடுகிடு உயர்வு
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப் பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில் நடக்கும் பூ மார்க்கெட்டிற்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்-றனர்.கடந்த, இரண்டு மாதங்களாக இப்பகுதியில் கடும் பனிப் பொழிவால், குண்டுமல்லி வரத்து குறைந்தது. இதனால், ஒரு-கிலோ குண்டுமல்லி, 1,000 ரூபாயை தாண்டி விற்பனை செய்-யப்பட்டது. இந்நிலையில், இன்று, 16, 17ல் தொடர் முகூர்த்தம் என்பதால், நேற்று காலை நடந்த பூக்கள் ஏலத்தில், குண்டுமல்லி விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ, 2,100 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது. இதனால் குண்டுமல்லி பயிரிட்ட விவசா-யிகள் மகிழ்ச்சியடைந்தனர்.