மேலும் செய்திகள்
பீரோவை திறந்து நகை, வாட்ச் திருட்டு
13-Aug-2025
மோகனுார், டிபன் கடை நடத்தி வருபவர் வீட்டில் புகுந்து நகை, வாட்ச் திருடிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.மோகனுார் பாம்பாட்டி தெருவை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 48. அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்துவரும் அவர், இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறார்.கடந்த, 10ல், வீட்டில் தளம் போடும் பணி நடந்தது. அதையடுத்து, அவரது இரண்டு மகள்கள் வீட்டுக்கு உள்ளேயும், கணவன் மனைவி இருவரும், வெளியேயும் படுத்திருந்தனர்.மறுநாள் காலையில், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பீரோவை திறந்து பார்த்த போது, அங்கிருந்த ஒரு பவுன் நகை, புளூடூத் கடிகாாரம், லேடிஸ் வாட்ச் ஆகியவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, மோகனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மோகனுார் எஸ்.ஐ., மோகன் தலைமையிலான போலீசார், வாங்கல் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அங்கு நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சிக்கந்தர் பாஷா மகன் ரகுமான், 24, புஞ்சை தோட்டக்குறிச்சி கல்யாணசுந்தரம் மகன் மதன், 20, வீரபாகு மகன் சுகந்தன், 23, என்பது தெரியவந்தது.மோகனுாரில், வெற்றி செல்வம் வீட்டில் நகை, வாட்ச் திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
13-Aug-2025