உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜே.கே.கே.., நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ஜே.கே.கே.., நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஜே.கே.கே., நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, கல்லுாரி தலைவர் செந்தாமரை தலைமையில் நடந்தது.சிறப்பாளராக பங்கேற்ற, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி, 213 மாணவ, மாணவியருக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தி பேசுகையில்,'' உங்களை உருவாக்க பெற்றோர்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் மறக்கக் கூடாது. பட்டங்கள் வாங்கிய பின், இத்துடன் நம் படிப்பு முடிந்து விட்டது என்று எண்ணவும் கூடாது. நம்மால் ஆன சேவையை மக்களுக்கு செய்திட வேண்டும்,'' என்றார்.நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, பல் மருத்துவக் கல்லுாரி முதல்வர் தனசேகர், துணை முதல்வர் சசிரேகா, பார்மசி கல்லுாரி முதல்வர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை