உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க அழைப்புநாமக்கல், நவ. 27-நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், சமூக நல்லிணக்கத்திற்காக சிறப்பாக செயல்புரிந்தவர்களுக்கு, 'கபீர் புரஸ்கார் விருது' ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.இந்த விருது ஒரு ஜாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள் பிற ஜாதி, இன வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிந்தால், அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வீரச்செயல் மூலம் உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்றுதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்பப்படுகிறது.எனவே, இவ்விருதிற்கு தகுதியானவர்கள் தங்களது விபரங்களுடன் டிச., 15க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்து மாவட்ட கலெக்டர் வளாகம், கூடுதல் கட்டடம், முதல் தளம், அறை எண்.234 மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து தமிழ், ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா இரண்டு நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தை பூர்விகமாக கொண்டவராக இருக்க வேண்டும்.மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக சமூக மற்றும் நல்லிணக்கத்திற்கான செயல் புரிந்து இருக்க வேண்டும்.விருது தொடர்பான விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலர் அறை எண்.234, கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டும், மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண், 9150057452ல் தொடர்பு கொண்டும் விபரம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை