கந்தம்பாளையம் எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பில் சாதனை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள ம.கந்தம்பாளையம் எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள், 2024---25ம் கல்வியாண்டில் நடந்து முடிந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாணவி கனிஷ்கா, 495 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம்; மாணவி தமிழ்விழி, 493 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம்; மாணவி லக்ஷனா, 492 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல், ஐந்து மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல், 16 மாணவர்களும், 470 மதிப்-பெண்களுக்கு மேல், 38 மாணவர்களும், 460 மதிப்பெண்களுக்கு மேல், 51 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல், 60 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 100 மாணவர்-களும் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, பொருளாளர் பாலசுப்பி-ரமணியம், செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.