உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏ.டி.எம்., கொள்ளையர்களை கஸ்டடி எடுத்த கேரளா போலீசார்

ஏ.டி.எம்., கொள்ளையர்களை கஸ்டடி எடுத்த கேரளா போலீசார்

ஏ.டி.எம்., கொள்ளையர்களைகஸ்டடி எடுத்த கேரளா போலீசார்பள்ளிப்பாளையம், அக். 5-கேரளா மாநிலம், திருச்சூரில், கடந்த, 27ல் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்களை, நாமக்கல், வெப்படை அருகே, போலீசார் துப்பாக்கியில் சுட்டு பிடித்தனர். இதில், கொள்ளையன் ஜூமாந்தின், 37, சம்பவ இடத்திலேயே பலியானார். குண்டு காயத்துடன் அசர் அலி, 28, பிடித்து கைது செய்தனர். மேலும், கன்டெய்னர் லாரியில் இருந்த இர்பான், சவுக்கீன் கான், முகமுது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய, 5 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஏ.டி.ஏம்., கொள்ளை கும்பல், 7 மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.பிடிப்பட்ட ஏ.டி.எம்., கொள்ளையர்கள் மீது பதியப்பட்ட வழக்கு சம்பந்தமான கோப்புகளை வாங்க, நேற்று முன்தினம் காலை கேரளா, ஆந்திரா மாநில போலீசார், நாமக்கல் வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். கேரளா போலீசார், நேற்று காலை, சேலம் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளை, திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கஸ்டடியில் வைத்து விசாரித்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை