பள்ளிப்பாளையத்தில் கிட்னி புரோக்கர் கைது
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், மேலும் ஒரு கிட்னி புரோக்கரை, சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமை மற்றும் குடும்ப சூழ்நி-லையை பயன்படுத்தி, கிட்னி புரோக்கர்கள் பணம் ஆசையை காட்டியும், மூளைச்சலவை செய்தும், சட்டவிரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபடுகின்றனர்.இதற்காக கிட்னி புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின்மோகன் ஆகியோர், தொழிலாளர்களை, 5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு கிட்னியை விற்க வைத்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன், கிட்னி புரோக்கர்கள் தலைமறைவாகி விட்டனர். பின், நாமக்கல் மருத்துவ அதிகாரிகள் விசாரணையில் திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகளில் கிட்னி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்க தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு கடந்த ஆகஸ்டில் அமைத்தது.கடந்த மாதம், 12ம் தேதி இரவு, சிறப்பு புலனாய்வு குழுவினர் பள்ளிப்பாளையம் அடுத்த அன்னை சத்யாநகர் பகுதியில் பதுங்-கியிருந்த கிட்னி புரோக்கர் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் இருவ-ரையும் கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இதையடுத்து, கிட்னி புரோக்கர் ஆனந்தன், ஸ்டாலின்மோகன் இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த, 11ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் உள்ள பயணியர் விடுதியில் வைத்து, கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர்.இதில், கிட்னி புரோக்கர்கள் தெரிவித்த தகவல்படி, அன்னை சத்யா நகரை சேர்ந்த முத்துசாமி, 45, என்ற கிட்னி புரோக்கரை சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர்.