மேலும் செய்திகள்
பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை
16-May-2025
நாமகிரிப்பேட்டை: கொல்லிமலை சுற்றுலா தலமாக மட்டுமின்றி, மிளகு, அன்னாசி, பலா, வாழை, காபி உள்ளிட்ட வேளாண் பொருட்களும் அதிகளவு கிடைக்கிறது. கொல்லிமலை பலாப்பழம் சிறியதாக இருந்தாலும், சுவை அதிகமாக இருக்கும். இதனால், கொல்லிமலை பலாப்பழம் என்றாலே சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்வர்.வைகாசி மாதம் தொடங்கி, ஆடி மாதத்தில் பலா அறுவடை அதிகமாக இருக்கும். ஆவணி மாதம் கொல்லிமலை பலா சீசன் முடிந்து விடும்.அதன் பின் பழம் கிடைக்காது. இந்தாண்டு சில வாரங்களுக்கு முன், பலா அறுவடை தொடங்கி விட்டது. செம்மேடு, சோளக்காடு, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் பழங்களை கொண்டு வந்து விற்று வருகின்றனர்.நேற்று, மெட்டாலா பகுதியில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பழங்களை கொண்டு வந்து விற்க தொடங்கியுள்ளனர். 100 ரூபாயில் தொடங்கி, 500 ரூபாய் வரை பழங்களை வாங்கி செல்கின்றனர். வரும் வாரங்களில் பழம் அதிகளவு வரத்தொடங்கி விடும் என கொல்லிமலை விவசாயிகள் தெரிவித்தனர்.
16-May-2025