உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பணப்பையை ஒப்படைத்த காவலாளிக்கு பாராட்டு

பணப்பையை ஒப்படைத்த காவலாளிக்கு பாராட்டு

குமாரபாளையம்: ஈரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன், 35; எலக்ட்ரிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று, குமாரபாளையம் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடைகளில் பணம் வசூலுக்காக, சேலம் - கோவை புறவழிச்சாலை, காவிரி பாலம் வழியாக டூவீலரில் சென்-றுள்ளார். அப்போது, தனியார் பள்ளி அருகே உள்ள வேகத்த-டையில் ஏறி இறங்கிய போது, வண்டியில் மாட்டியிருந்த பணப்பை தவறி கீழே விழுந்தது தெரியாமல், மகேந்திரன் சென்றார். பின், சிறிது துாரம் சென்றதும் வண்டியில் பணப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பணி-யாற்றும் நிறுவனத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், பவானி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.இந்நிலையில், தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஈஸ்வர், 55, என்பவர், கீழே கிடந்த பணப்பை எடுத்-துள்ளார். அதில் பணம் இருந்ததையறிந்து, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். பணப்பையை ஒப்ப-டைத்த காவலாளி ஈஸ்வருக்கு, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை