குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் வெள்ளி விழா, ஆண்டு விழா கொண்டாட்டம்
குமாரபாளையம்: குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில், ஸ்ரீரெங்கசாமி கல்வி அறக்கட்டளை தொடங்கி, 25 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி, வெள்ளி விழாவும், 'எக்ஸலன்டா-25' என்ற ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. நிறுவன அறங்காவலர் பார்வதி நடேசன், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி மதன்கார்த்திக் ஆகியோர், விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மதன்கார்த்திக், அனைவரையும் வரவேற்றார்.எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், எக்ஸல் பொறியியல் கல்லுாரி முதல்வரும், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குனருமான பொம்மண்ண ராஜா, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மற்றும் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஆகியோர், ஆண்டறிக்கை வாசித்தனர். தொடர்ந்து, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு, நிறுவன தலைவர் நடேசன் விருது வழங்கினார். தொடர்ந்து வெள்ளிவிழா கொண்டாட்ட வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது. பின் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, திரைப்பட நடிகை கயாது லோகர், விஜய், 'டிவி' பாடகர்கள் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா ஜெர்சன், நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஆர்.ஜே., விஜய் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தி சாந்தனு ஆகியோர் கலந்துகொண்டனர்.