உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெரிய மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெரிய மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வெண்ணந்தூர்,வெண்ணந்துார் அருகே அமைந்துள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.வெண்ணந்துார் அடுத்த அலவாய்பட்டியில் அமைந்துள்ள இக்கோவில்களுக்கு, 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை ஊர் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல் நடந்தது. இதில் எட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஓ.சவுதாபுரம், வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர். அலவாய்பட்டி தொரட்டி மரத்து பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. இன்று காலை கோபுர கலசத்திற்கு மகா தீபாராதனை செய்து தீர்த்தம் தெளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை