உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் தவறி விழுந்தகூலி தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்தகூலி தொழிலாளி பலி

ப.வேலுார்ஈரோடு மாவட்டம், பாசூர் அருகே பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், 53; கூலித்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. ப.வேலுார் அருகே, சிறுநல்லி கோவில் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது தோட்டத்தில், வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை பார்த்து வரும் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகே துாங்கி கொண்டிருந்தார். அப்போது, துாக்கத்தில் நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்து கிடந்துள்ளார். நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கிணற்றில் கதிர்வேல் சடலமாக மிதப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஜேடர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ