உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த பட்டணம் பரமேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 40; கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி, 39; கூலித்தொழிலாளி. தம்பதிக்கு, நான்கு பெண் குழந்தைகள். கிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை கிருஷ்ணன் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளார். அதில், காரம் அதிகமாக இருந்ததால், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற கிருஷ்ணன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.துாங்கிக்கொண்டிருப்பார் என, நினைத்த காந்திமதி, சிறிதுநேரம் கழித்து சென்று பார்த்துள்ளார். அப்போது, கிருஷ்ணன் துாக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை