உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடி கடைசி ஞாயிறு: கோவில் வேல், அரிவாள், கம்புக்கு மோகனுார் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி ஞாயிறு: கோவில் வேல், அரிவாள், கம்புக்கு மோகனுார் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை

மோகனுார்: ஆடி கடைசி ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மோகனுார் காவிரி ஆற்றில் குவிந்து, கோவில் வேல், அரிவாள் உள்ளிட்ட பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையில், குல-தெய்வம் கோவிலில் உள்ள வேல், அரிவாள், கம்பு, போன்ற ஆயுதங்களை, மோகனுார் காவிரி ஆற்றில் கொண்டு வந்து சுத்தம் செய்து, பூ, பொட்டு வைத்து பூஜை செய்து, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, தங்கள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து சுவாமியை வழிபடுவது வழக்கும்.அதன்படி, ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், மோகனுார் காவிரி ஆற்றில் குவிந்தனர். அங்கு, புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்தி-ருந்த வேல், அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்-களை சுத்தம் செய்து, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்துக்-கொண்டு ஊர்வலமாக சென்றனர். மோகனுார் அடுத்த கிராயூரில் உள்ள மாரியம்மனுக்கு, காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்-தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்-பட்டது.அதேபோல், ஆரியூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். அதையடுத்து, மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரி-சனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ