கிருஷ்ணராயபுரம் பகுதியில் லேசான மழை பொழிவு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், லேசான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, வயலுார் பஞ்சாயத்து உட்பட்ட சரவணபுரம், கோடங்கிப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மதியம் லேசான மழை பெய்தது. சாரல் மழை பெய்ததால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை, சோளம், பயிர்கள் பசுமையாக செழிப்பாக வளர்வதற்கு பயன் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.