மேலும் செய்திகள்
மாவட்டத்தில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பில்லை
01-Nov-2025
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல், 30 வரை, ஐந்து நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, ஐந்து நாட்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பகல் நேர அதிகபட்ச வெப்பம், 32 டிகிரி செல்ஷியஸ், இரவு நேர வெப்பம், 24 டிகிரி செல்ஷியஸ் ஆக நிலவியது.இன்று முதல் 30 வரை, ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை, 30 டிகிரி முதல் 31 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 22 முதல் 23 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 55 முதல், 80 சதவீதம் வரை இருக்கும். இன்று, 7 மி.மீ., நாளை, 6 மி.மீ., 28ல், 7 மி.மீ., 29ல், 5 மி.மீ., 30ல், 4 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
01-Nov-2025