உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் 5 நாள் லேசான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 5 நாள் லேசான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல், டிச. 21-நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த, ஐந்து நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், இன்று (டிச.,21) முதல் 25ம் தேதி வரை ஐந்து நாட்கள் அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 30 முதல், 31 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 23 டிகிரியாக இருக்கும். வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 60 முதல், 84 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 4 கி.மீ.,முதல் 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மழை காலத்தில், கோழிப்பண்ணைகளில் பூஞ்சை நச்சு தாக்கத்தை தவிர்க்க, கோழிப்பண்ணை வளாகம் மற்றும் தீவன ஆலை வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால், நெல் விவசாயிகள் கால விரயத்தை தவிர்க்க, நாற்றங்கால் முறைக்கு பதிலாக, நேரடி நெல் விதைப்பு செய்திட வேண்டும். 1 ஏக்கர் நிலத்திற்கு, 10 கிலோ விகிதத்தில் விதை நெல் வாங்கி, வயலில் விதைப்பு செய்ய, நேரடி நெல் விதைப்பு கருவியை பயன்படுத்தலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை