உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய லைன் இன்ஸ்., கேங்மேன் சஸ்பெண்ட்

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய லைன் இன்ஸ்., கேங்மேன் சஸ்பெண்ட்

நாமக்கல் :மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் ஆகியோரை, மேற்பார்வை பொறியாளர், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மொளசியை சேர்ந்தவர் நவநீதன், 36; எலக்ட்ரீஷியன். தன் வீட்டிற்கு மின் இணைப்பு பெற, ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்கவில்லை. இதுகுறித்து, எர்ணாபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். அங்கு, பணியாற்றிய குருக்கபுரம் எல்லப்பாளையத்தை சேர்ந்த லைன் இன்ஸ்பெக்டர் மாது, 57, தளிகையை சேர்ந்த கேங்மேன் விவேகானந்தன், 41, ஆகியோர், '5,500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்' என, பேரம் பேசியுள்ளனர்.லஞ்சம் கொடுக்க விரும்பாத நவநீதன், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, கடந்த, 20ல், வேலகவுண்டம்பட்டி அருகே, புத்துார் சாலையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நவநீதன், கேங்மேன் விவேகானந்தனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,(பொ) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர், கையும் களவுமாக விவேகானந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல்படி, லைன் இன்ஸ்பெக்டர் மாதுவையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம், நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !