கனரா வங்கி சார்பில் கடன் திருவிழா
ராசிபுரம்: ராசிபுரத்தில் கனரா வங்கி சார்பில் தொழில் கடன் திருவிழா, நேற்று நடந்தது. எம்.எஸ்.எம்.இ., சுலப் மண்டல மேலாளர் அஜிதன் கலந்து கொண்டார். அவர், மத்திய அரசு வழங்கும் தொழில் கடன்கள் குறித்தும், தொழில் கடனுக்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.ஏற்கனவே கடன் பெற்ற பயனாளிகள் தங்களது வெற்றிக்கதை-களை கூறினர். ராசிபுரம் கனரா வங்கி அதிகாரிகள், மக்களின் சந்-தேகங்களுக்கு பதில் கூறினர். பா.ஜ., நிர்வாகி லோகேந்திரன் மத்-திய அரசு திட்டங்கள் குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆவணங்களை கொண்டுவந்த தொழில் முனைவோரின் சான்றி-தழ்கள் கூட்டம் நடந்த இடத்திலேயே சரிபார்க்கப்பட்டு தேவை-யான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.