மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., மாநாடு..
30-May-2025
நாமக்கல், மா.கம்யூ., கட்சி சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏளூரில் பிரசார இயக்கம் நடந்தது. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய பா.ஜ., அரசு விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகை வழங்குவதை கைவிட்டு, செல்வ வரி விதிக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலையை, 200 நாட்களாக மாற்றி, தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். மாநில அரசு, வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு, இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்.ஏளூர் பஞ்.,ல் கட்டி முடிக்கப்பட்டுள்ள, மூன்று கழிப்பிடங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதி, துாய்மை பணியாளர்கள் நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். மாவட்ட குழு உறுப்பினர் ராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடேசன், லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
30-May-2025