ப.வேலுாரில் மகா கந்த சஷ்டி திருக்கல்யாண பெருவிழா
ப.வேலுார், ப.வேலுார் அருகே, சின்னகரசம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கந்த சஷ்டி திருக்கல்யாண விழா நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதையொட்டி, முதலாம் ஆண்டாக இக்கோவிலில் உள்ள வேலாண்டவருக்கு, நாளை அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி வேள்வியுடன், வேலாண்டவருக்கு காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து வரும், 27 வரை தினந்தோறும் மாலை, வேலாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், வேள்வி வழிபாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 28 மாலை, 5:30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், வேலாண்டவருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருக்கோலத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மகா கந்த சஷ்டி திருக்கல்யாண விழா ஏற்பாடுகளை, வேலா ண்டவர் காவடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.