மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் நான் முதல்வன் திட்டத்தில் பணியாணை
மல்லசமுத்திரம், மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில், தமிழக அரசின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. தலைவர் பாரத் குமார் தலைமை வகித்தார். முகாமில், 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கின. 700க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர். இதில், 350 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.குறிப்பாக, டாடா எலக்ட்ரானிக்ஸ், ஸ்டாலன்டிஸ், பிரேக்ஸ் இந்தியா, டெல்பி டி.வி.எஸ்., டெனக்கோ மற்றும் பல மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. விழாவில், மஹேந்ரா பொறியியல் கல்வி குழும செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர்கள் சண்முகம், இளங்கோ, செந்தில்குமார், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் விஸ்வநாதன், புல முதல்வர்கள் நிர்மலா, ராஜவேல், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரபு மணிகண்டன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.