உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மஹேந்ரா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரிகளின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மஹேந்ரா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரிகளின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாமக்கல்: மஹேந்ரா பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி-களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, கல்லுாரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கலையரங்கில் நடந்தது. கல்லுாரி தலைவர் பரத்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து-கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. கல்லுாரியில் அவர்கள் கழித்த நினைவுகளை மீட்டெடுக்க, புகைப்பட காட்சிகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து-கொள்ளும் வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது, பல்வேறு துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாண-வர்கள், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர். வளாகத்தின் புதிய முன்னேற்றங்களை அறிய, மாணவர்களுக்கு வளாக சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்-பட்டது. இந்த சந்திப்பு மாணவர்களுக்கிடையே உறவை வலுப்படுத்தியதோடு மட்டுமின்றி, கல்லுாரியின் வளர்ச்சிக்கு பங்-களிப்பு செய்யும் வகையில் அமைந்தது.நிகழ்ச்சியில், 1999 முதல், 2021 வரை பயின்ற முன்னாள் மாண-வர்கள், கல்லுாரி செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், மஹேந்ரா பொறியியல் கல்லுாரி முதல்வர் சண்முகம், மஹேந்ரா தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் இளங்கோ, புல முதல்வர்கள் நிர்மலா, ராஜவேல், துறைத்தலைவர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், வேலை வாய்ப்பு இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி