உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கரியாம்பட்டியை சேர்ந்தவர் இளையான் மகன் லோகநாதன், 49; கூலித்தொழிலாளி. இவர், அடிக்கடி முயல், பன்றிகளை வேட்டையாடுவதாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் லோகநாதன் வீட்டில் சோதனையிட்டனர். அப் போது, உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆயில்பட்டி போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ